அனைத்து சாதி பிரிவினரும் அர்ச்சகர்களாக பணியில் நியமனம் – தமிழக அரசு விவாதம்!!!

0
அனைத்து சாதி பிரிவினரும் அர்ச்சகர்களாக பணியில் நியமனம் - தமிழக அரசு விவாதம்!!!
அனைத்து சாதி பிரிவினரும் அர்ச்சகர்களாக பணியில் நியமனம் - தமிழக அரசு விவாதம்!!!

அர்ச்சகர்களாக அனைத்து பிரிவை சேர்ந்தவர்களும் நியமிக்கப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார். அவரின் இந்த அறிவிப்புக்கு எதிராக எஸ்.ஸ்ரீதரன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அந்த வழக்கிற்கு தமிழக அரசு பதில் அளித்துள்ளது.

அனைத்து சாதி பிரிவினர் அர்ச்சகராக முடியாது…

தமிழத்தில் 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பாத்து ஆண்டுகளுக்குப்பின் பிடித்துள்ளது. அதேபோல் ஆட்சி அமைத்த நாளில் இருட்னது இன்றுவரை மிக சிறப்பாக ஆட்சி செய்து வருகிறது. 100 நாட்களில் பல நல்ல நலத்திட்டங்கள் என பலவற்றை செய்து வருகிறது. இதற்கிடையில் அந்தந்த துறையை சேர்ந்த அமைச்சர்களும் மிக சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஒரு அறிக்கை இன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் அணைத்து சாதி பிரிவினரும் அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவர் என்று கூறினார்.

அனைத்து சாதி பிரிவினர் அர்ச்சகராக முடியாது...
அனைத்து சாதி பிரிவினர் அர்ச்சகராக முடியாது…

அதற்கான பயிற்சி திட்டங்களும் கொண்டு வரப்பட்டது. இந்த பயிற்சி திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று முடித்த பின் அர்ச்சகராக நியமிக்கப்படுவார் என்றும் கூறினார். அவரின் இந்த அறிக்கைக்கு எதிராக சென்னையை சேர்ந்த எஸ்.ஸ்ரீதரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக பணியில் அமர்த்துவது கருவறைக்குள் அனுமதிப்பது போல் ஆனது இது ஆகம விதிகளுக்கு எதிரானது எனவே இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு தமிழக அரசு தடை விதிக்குமாறும் 44000க்கும் மேற்ப்பட்ட அறநிலையத்துறை கோயில்களில் 500 கோயில்களில் மட்டும் தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகராவது, கருவறைக்குள் அனுமதிப்பது ஆகம விதிகளுக்கு முரணானது.எனவே தமிழக அரசு இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழகத்தில் உள்ள 44 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட அறநிலையத்துறை கோயில்களில் 500 கோயில்களில் மட்டும் தான் தமிழகத்தில் ஆகம விதிகள் பின்பற்றப்படுகிறது எனவே அந்த கோயில்களில் பயிற்சியை முடித்தவர்களை அர்ச்சகராக நியமிக்க கூடாது.

அனைத்து சாதி பிரிவினர் அர்ச்சகராக முடியாது...
அனைத்து சாதி பிரிவினர் அர்ச்சகராக முடியாது…

அதுமட்டுமில்லாமல் மற்ற 43,500 கோயில்களில் அவர்களை நியமிக்கலாம் என்றும் மனுவில் அரசுக்கு கூறியுள்ளார். இந்த வழக்கிற்கு தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் முத்துக்குமார் ஆஜராகி விளக்கம் கொடுத்தார், அதாவது உச்சநீதிமன்றமே ஆகம விதிகளை முறையாக படித்து தான் அனைத்து சாதியை சேர்ந்தவர்களும் அர்ச்சகராகலாம், மந்திரங்களை ஓதலாம் என்று உத்தரவை பிறப்பித்திருக்கிறது, அதை நினைவில் கொள்ளாமல் உச்சநீதிமன்றத்தை அவதமதிப்பது போல் இந்த பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று கூறினார். அதுமட்டுமில்லாமல் இந்த வழக்கை நீண்ட நாட்களை வளரவிடாமல் இப்பொழுது தள்ளுபடி செய்து விடவேண்டும் என்றும் கூறியிருந்தார். பின் தலைமை நீதிபதி இந்த வழக்கை மூன்று வாரங்களுக்கு பின் விசாரிக்கப்படும் என்று தள்ளிவைத்துள்ளார்.

ஃபேஸ்புக் Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here