தமிழக மாணவர்களே., இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு., வெளியான அறிவிப்பு!!!

0
தமிழக மாணவர்களே., இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு., வெளியான அறிவிப்பு!!!
தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் MCA, MBA, ME, M.Tech ஆகிய படிப்புகளில் சேர்வதற்கு TANCET, CEETA Pg தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்வில் வெற்றிப் பெற்றால் மட்டுமே இந்த படிப்புகளில் சேர முடியும் என்ற நிபந்தனையும் உள்ளது. இந்நிலையில் இந்த தேர்வு மார்ச் மாதம் 9, 10ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தேர்வுக்கு மாணவர்கள் ஜனவரி 10ஆம் தேதி முதல் பிப்ரவரி 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது.
ஆனால் பலரும் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கும் படி கோரிக்கை வைத்துள்ளனர். இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகம் இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை பிப்ரவரி 12ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. அதன்படி மாணவர்கள் https://tancet.annauniv.edu/tancet/index.html என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here