17 வயது சிறுவனின் உயிரை கடவுள் போல் காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்.,, ஆச்சரியமான சம்பவம்!!

0
17 வயது சிறுவனின் உயிரை கடவுள் போல் காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்.,, ஆச்சரியமான சம்பவம்!!
17 வயது சிறுவனின் உயிரை கடவுள் போல் காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்.,, ஆச்சரியமான சம்பவம்!!

மகாராஷ்டிரா மாநிலத்தில், மலையேற்றத்தில் இருந்து தவறி பள்ளத்தாக்கில் விழுந்த 17 வயது சிறுவனின் உயிரை கடவுள் போல ஒரு ஆப்பிள் வாட்ச் காப்பற்றி உள்ளது.

ஆப்பிள் வாட்ச்:

மகாராஷ்டிராவில் 17 வயது சிறுவன் பள்ளத்தாக்கில் தவறி விழுந்ததை அடுத்து, அவர் உயிரை ஒரு ஆப்பிள் வாட்ச் காப்பற்றி உள்ளதாக அந்த சிறுவனே பேட்டி கொடுத்துள்ளார். அதாவது கடந்த ஜூலை மாதம் 22ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட்டைச் சேர்ந்த 17 வயது மருத்துவ மாணவர், லோனாவாலாவுக்கு பக்கத்தில் உள்ள விசாபூர் கோட்டையில் தனது 3 நண்பர்களுடன் மலை ஏற்றத்திற்கு சென்றுள்ளார். அந்த சமயம் கடுமையான மழை பெய்ததால், மேத்தா தவறி 130 – 150 மீட்டர்கள் கீழே உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து உள்ளார்.

 

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதிஷ்டவசமாக மேத்தா பள்ளத்தாக்கிற்குள் விழாமல் மரம், கல்லால் சூழ்ந்த இடத்தில் தொங்கி கொண்டிருந்திருக்கிறார். காலில் அடிபட்டு இருந்தும், மேத்தா மயக்க நிலைக்கு செல்லாமல் சுயநினைவில் இருந்துள்ளார். இதையடுத்து அவர் கையில் போன் எதுவும் இல்லை, இருப்பினும் நண்பர்களை எப்படியாவது தொடர்பு கொள்ள வேண்டும் என்று நினைத்து கொண்டிருக்கும் நிலையில், அவர் கையில் கட்டியிருந்த ஆப்பிள் வாட்ச் நினைவுக்கு வந்துள்ளது. அதில் போன் செய்வதற்கான வசதிகள் இருந்த நிலையில், மேத்தா தனது நண்பர்களையும் குடும்பத்தினரையும் தொடர்பு கொண்டுள்ளார்.

 

ஜல்லிக்கட்டுக்கு தடை? தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

இதையடுத்து அவர்கள் மேத்தாவை காப்பாற்ற மீட்புக் குழுக்களைத் தொடர்பு கொண்டனர். இதையடுத்து விரைந்து வந்த மீட்புக் குழு பள்ளத்தில் இருந்து மேத்தாவை மீட்டு ஹாஸ்ப்பிடலில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து சிறுவனுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர் ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்டார். இப்போது சிறுவன் மிகவும் நலமுடன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here