வாட்ஸ் அப் பயனர்களுக்கு செக் – இதை செய்யலைன்னா உங்க Account கட்! மெட்டா நிர்வாகம் கறார்!!

0
வாட்ஸ் அப் பயனர்களுக்கு செக் - இதை செய்யலைன்னா உங்க Account கட்! மெட்டா நிர்வாகம் கறார்!!

பெரும்பாலான மக்கள் அதிகம் பயன்படுத்தும் வாட்ஸ்அப் செயலி, குறிப்பிட்ட இரண்டு மாடல் ஐபோன்களில் வருகிற அக்டோபர் மாதம் முதல் இயங்காது என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

வாட்ஸ்அப் நிறுத்தம்:

உலகில் உள்ள பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படும் தளங்களில் ஒன்று வாட்ஸ் அப். இந்த நிறுவனம் தங்களது பயனர்களுக்கு, பல புதிய அப்டேட்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது, ஆப்பிள் மொபைல் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை வாட்ஸ் அப் கொடுத்துள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது, ஐ போன் மாடல் 5 மற்றும் 5c களில் இன்னும் iOS தளம் 10 மற்றும் 11 ஆகிவை இயங்குவதால், வருகிற அக்டோபர் மாதம் முதல் இந்த போன்களில் வாட்ஸ் அப் செயல்படாது என அறிவித்துள்ளது. அக்டோபர் 24 ஆம் தேதிக்கு முன்பு, பயனர்கள் தங்கள் OS-ஐ அப்டேட் செய்துவிட்டால் எந்த பிரச்சினையும் இல்லை என்றும், அப்படி இல்லாதவர்களின் வாட்ஸ்அப் கணக்குகள் கண்டிப்பாக முடக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மேலே சொன்ன 2 மாடல் ஐபோன் வைத்திருக்கும் பயனர்கள் செட்டிங் பகுதிக்கு சென்று சாப்ட்வேர் அப்டேட் செய்தால், மெட்டா நிறுவனத்தின் இந்த அதிரடி நடவடிக்கையில் இருந்து தப்பிக்கலாம் என சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here