நடிப்புல தூள் கிளப்புறீங்களே.., விஜய் டிவி  நடிகைக்கு  பெரிய இடத்தில் இருந்து கிடைத்த  வெகுமதி!!

0
விஜய் டிவிக்கு பிடிச்ச கிரகமா இது.., இனி மீள்வது கொஞ்சம் கஷ்டம் தான் - என்ன நடக்க போகுதோ?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் தென்றல் வந்து என்னைத்தொடும் சீரியல் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் இந்த சீரியலுக்கு பல எதிர்ப்புகள் வந்தாலும் கூட தற்போது ரசிகர்கள் பலரும் இந்த சீரியலை ரசித்து பார்க்க துவங்கிவிட்டனர்.

இந்த சீரியலில் கதாநாயகியாக பவித்ராவும் அவருக்கு ஜோடியாக வினோத்பாபுவும் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் பவித்ராவிற்கும் கால் செய்து அனுஷ்கா இந்த சீரியலை நான் தினமும் பார்த்து வருவதாகவும், உங்களது நடிப்பு மிகவும் அற்புதமாக இருக்கிறது எனவும் கூறியுள்ளார்.

இந்த செய்தியை கேட்டு மகிழ்ச்சி அடைந்து பவித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது அனுஷ்காவின் ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு ஊக்கத்தையும் மகிழ்ச்சியை கொடுத்தது. ஆரம்பத்தில் இதனை நான் பிராங்க் என்று நினைத்தேன். பிறகு இது உண்மை எனத் தெரிந்த பிறகு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், பவித்ராவிற்கு சீரியல் நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here