கொரோனா வைரஸை 4 நாட்களில் குணப்படுத்தும் இரட்டை மருந்து கலவையை கண்டுபிடித்து சோதனையில் வெற்றி பெற்று உள்ளதாக வங்கதேச மருத்துவர்கள் குழு அறிவித்து உள்ளது.
கொரோனாவிற்கு மருந்து:
உலகமே கொரோனா தாக்கத்தால் நடுங்கிப்போய் உள்ளது. அதனை குணப்படுத்த மருந்து கண்டறிய உலக ஆராய்ச்சியாளர்கள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு உள்ளனர். தடுப்பு மருந்து கண்டறியும் சோதனையும் இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் கொரோனவை 4 நாட்களில் குணப்படுத்தும் இரட்டை மருந்தை கண்டறிந்து உள்ளதாக வங்கதேச மருத்துவர்கள் அறிவித்து உள்ளனர்.
இரட்டை மருந்து கலவை:
வங்கதேசத்தை சேர்ந்த தரெக் ஆலம் என்ற மருத்துவரின் தலைமையிலான தனியார் மருத்துவர்கள் குழு கொரோனா மருந்து குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருந்தது. மருத்துவ துறையில் அதிகமாக பயன்படுத்தப்படும் ஐவர்மெக்டின் மற்றும் டாக்ஸிசைக்ளின் ஆகிய மருந்துகளை கலந்து 60 கொரோனா நோயாளிகளுக்கு கொடுத்து இவர்கள் பரிசோதித்து உள்ளனர். இதில் 60 பேரும் 4 நாட்களில் கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளனர்.

மருந்து கொடுத்த 4வது நாளில் நடைபெற்ற சோதனையில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகி உள்ளது. இந்த மருந்து கலவையால் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படவில்லை எனவும், இதற்கு சர்வதேச அதிகாரத்தை பெறுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளதாகவும் மருத்துவர்கள் குழு தெரிவித்து உள்ளது.
To Subscribe Youtube Channel ![]() | Click Here |
To Join WhatsApp Group ![]() | Click Here |
To Join Telegram Channel![]() | Click Here |