போலி டாக்டர் பட்ட வழக்கு.., இயக்குனர் ராஜு ஹரீஷ்க்கு முன்ஜாமீன் தள்ளுபடி.., ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!!

0
போலி டாக்டர் பட்ட வழக்கு.., இயக்குனர் ராஜு ஹரீஷ்க்கு முன்ஜாமீன் தள்ளுபடி.., ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!!
போலி டாக்டர் பட்ட வழக்கு.., இயக்குனர் ராஜு ஹரீஷ்க்கு முன்ஜாமீன் தள்ளுபடி.., ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடிகர் வடிவேலு, இசையமைப்பாளர் தேவா உள்ளிட்ட பல்வேறு துறை பிரபலங்களுக்கு கடந்த 28ம் தேதி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. ஆனால் இந்த பட்டங்கள் அனைத்தும் போலியானவை என தகவல் வெளிவந்து பல தரப்பினரையும் அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியது. இது தொடர்பாக நாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளோம் என அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் தெரிவித்தார். அதோடு கோட்டூர் காவல் நிலையத்தில் புகார் மனுவையும் சமர்ப்பித்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதன் காரணமாக விருதுகளை வழங்கிய அமைப்புகள் மீது 7 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீஸ் விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் இந்த அமைப்பின் இயக்குனர் ஹரிஷ் என்பவர் இந்த வழக்கு சம்பந்தமாக புகார் மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். இதில் “எங்களது அமைப்பு கல்வி உதவி, மனித உரிமையின் விழிப்புணர்வு மற்றும் கல்வி முன்னேற்றம் தொடர்பான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறோம். எனவே இந்த துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகளையும் வழங்கி வருகிறோம்.

ரேஷன் பயனர்களே உஷார்., இந்த தவற செஞ்சா, இனி ரேஷன் பொருட்கள் கட்! அரசு அறிவிப்பு!!

ஆனால் நடந்த இந்த நிகழ்வுக்கு அண்ணா பல்கலைகழகமோ, சிறப்பு விருந்தினர்களோ பொறுப்பு இல்லை. மேலும் வழக்கு சம்பந்தமாக போலீஸ் விசாரணைக்கு எந்நேரமும் நான் ஒத்துழைப்பு தர உள்ளேன். எனவே இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார். இதற்கு காவல்துறை சார்பில், “இந்த நிகழ்வால் பல்வேறு துறை அதிகாரிகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் வழக்கு குறித்த விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது. எனவே மனுதாரரின் முன்ஜாமீன் ரத்து செய்யப்பட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலி பட்டம் வழங்கிய அமைப்பின் இயக்குனர் ஹரிஸின் மனுவை நீதிபதி தமிழ்செல்வி தள்ளுபடி செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here