உலக கோப்பையில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் திடீர் விலகல்…, வெளியான உண்மை காரணம்!!

0
உலக கோப்பையில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் திடீர் விலகல்..., வெளியான உண்மை காரணம்!!
உலக கோப்பையில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் திடீர் விலகல்..., வெளியான உண்மை காரணம்!!

ஒருநாள் உலக கோப்பை தொடருக்காக, சர்வதேச அணிகள் அனைத்தும் மற்ற அணிகளுக்கு எதிராக ஒருநாள் வடிவிலான தொடரிலேயே அதிக அளவில் விளையாடி வருகின்றனர். இந்த வகையில் தென் ஆப்பிரிக்க அணியானது, இம்மாத தொடக்கத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை விளையாடியது.

Enewz Tamil WhatsApp Channel 

இந்த போட்டியில், உலக கோப்பை அணிக்கு தேர்வு செய்யப்பட்ட வீரர்களை பெரும்பாலும் இடம் பெற்றிருந்தனர். இதில், தென்னாபிரிக்காவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான அன்ரிச் நார்ட்ஜே காயம் அடைந்துள்ளார். இவரது காயத்தின் தன்மையை ஸ்கேன் செய்து பார்த்த பிறகு, உலக கோப்பையில் இவரால் விளையாட முடியாது என தெரிவித்துள்ளனர். இதையடுத்து, புதுப்பிக்கப்பட்ட தென்னாப்பிரிக்கா உலக கோப்பை அணியை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

உலகக்கோப்பையில் அஸ்வின், சஞ்சு சாம்சன் & சாஹலுக்கு வாய்ப்பு?? பிசிசிஐ எடுக்க போகும் அதிரடி முடிவு!!

தென்னாப்பிரிக்காவின் புதுப்பிக்கப்பட்ட அணி: டெம்பா பவுமா (சி), ஜெரால்ட் கோட்ஸி, குயின்டன் டி காக், ரீசா ஹென்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மகராஜ், ஐடன் மார்க்ராம், டேவிட் மில்லர், லுங்கி என்கிடி, ஆண்டிலே பெலுக்வாயோ, தப்ராசி ரபவான்சி, டாகிசோ ரபவான்சி, ரஸ்ஸி வான் டெர் டுசென், லிசாட் வில்லியம்ஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here