லியோ படத்தில் இணைந்த மற்றுமொரு வில்லன் நடிகர்..,வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!!

0
லியோ படத்தில் இணைந்த மற்றுமொரு வில்லன் நடிகர்..,வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!!
லியோ படத்தில் இணைந்த மற்றுமொரு வில்லன் நடிகர்..,வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!!

நடிகர் விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தில் மீண்டும் ஒரு வில்லன் இணைந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

லியோ திரைப்படம்:

நடிகர் விஜய் வாரிசு படத்தை தொடர்ந்து சென்சேஷன் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் படைப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே இவர்களது காம்போவில் வெளியான மாஸ்டர் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றதால், லியோ படத்தை முழுக்க முழுக்க என்னோட பாணியில் எடுக்க போகிறேன் என்று லோகேஷ் தெரிவித்திருந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் டைட்டில் வீடியோ வெளியாகி வைரலானது. தற்போது இப்படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இதுவரை கெளதம் மேனன், மிஷ்கின் அர்ஜுன் ஆகிய மூன்று வில்லன்களின் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. இப்பொழுது சஞ்சய் தத் வைத்து ஷூட்டிங்கை நடத்தி வருகிறார் லோகேஷ்.

தமிழகத்தில் தடையில்லாத மின்சாரத்தினால் ஏற்பட்ட நிலை., அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!!!

இப்படத்தில் ஏற்கனவே ஆறு வில்லன்கள் இருக்கும் நிலையில், தற்போது மீண்டும் ஒரு வில்லன் களமிறங்க இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது விஜய் நடிக்கும் லியோ படத்தில் நடிகர் மதுசூதனன் ராவ் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதை கேட்ட ரசிகர்கள் ஒரு படத்துல எத்தனை வில்லன்டா என்று குழம்பி போய் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here