தமிழக கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை…,காரணம் இது தான்?

0
தமிழக கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை...,காரணம் இது தான்?
தமிழக கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை...,காரணம் இது தான்?

கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழக சென்னை மையத்தில் பட்டப்படிப்பு படித்து வரும் மாணவிகள் கடந்த 2 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது, சென்னை மையத்தில் எம்.காம் படிக்கும் மாணவிகள் 3 ஆண்டுகள் முடித்தால் இளங்கலை பட்டப்படிப்புக்கான சான்றிதழ் மற்றும் 5 ஆண்டுகள் முடித்தால் முதுகலை பட்டப்படிப்புக்கான சான்றிதழ் வழங்கப்படும் எனக் கூறி கடந்த 2019 ஆம் ஆண்டு சேர்க்கை நடத்தப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

ஆனால், 3 ஆண்டுகள் படித்த மாணவிகளுக்கு இளங்கலை படிப்புக்கான சான்றிதழ்களை வழங்காமல் 5 ஆண்டுகளும் படிக்க வேண்டும் என்று அன்னை தெரசா பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் சொல்லப்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவிகள் கடந்த 2 நாட்களாக போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு அன்னை தெரசா பல்கலைக்கழகத்தின் சென்னை மையத்திற்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here