தமிழக அரசிடம் அரியர் தேர்வு நடத்த அண்ணா பல்கலை கோரிக்கை!!

0

தமிழக அரசு அறிவித்த அரியர் மாணவர்களின் தேர்ச்சியை ஏற்க முடியாது என அறிவித்த அண்ணா பல்கலைக்கழகம், தற்போது அரியர் தேர்வுகளை நடத்த தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழக அரசின் அறிவிப்பு:

இந்த கொரோனா காலகட்டத்தில், கல்லூரி மாணவர்கள், கல்லூரிக்கு நேரடி வருகை தந்து தேர்வு எழுதுவதில் உள்ள சிக்கல்களை கருத்தில் கொண்டும், அனைத்து மாணவர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டும், தமிழக அரசு இறுதி ஆண்டு மாணவர்களை தவிர்த்து, தேர்வு கட்டணம் செலுத்திய பிற மாணவர்களுக்கு தேர்ச்சி என்ற அறிவித்தது. இந்த அறிவிப்பானது மாணவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. ஆனால் இந்த அறிவிப்பை அண்ணாபல்கலைக்கழகம் ஏற்க மறுத்தது.

நீதிமன்ற வழக்கு:

 

அண்ணாபல்கலைக்கழகத்தின் இது குறித்து அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சில் விளக்கம் கேட்டபோது, தமிழக அரசின் இந்த அரியர் மாணவர்களுக்கு தேர்வு இல்லாமல் தேர்ச்சி என்பது கல்வி கொள்கைகளுக்கு முரண்பாடானது எனவும் தெரிவித்தது. இது குறித்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையிலும் தமிழக அரசின் அரியர் மாணவர்களுக்கு தேர்வு வைக்காமல் தேர்ச்சி என்ற முடிவை ஏற்று கொள்ள முடியாது என கூறிய நிலையில், தற்போது அரியர் மாணவர்களுக்கான தேர்வுகள் நடத்த அனுமதி அளிக்குமாறு அண்ணாபல்கலைக்கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here