விவசாயிகள் கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் – களத்தில் அன்னா ஹசாரே!!

0

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே. இவர் வேளாண் சட்டங்களுக்கு எதிராக “டெல்லி சாலோ” என்ற பெயரில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வைகையில் இன்று நடக்கும் பாரத் பந்த் போராட்டத்தை தொடங்கினர்.

அன்னா ஹசாரே

அன்னா ஹசாரே என்று கூறப்படும் கிசான் பாபுராவ் அசாரே, ஓர் இந்திய சமூக சேவகர். கிராமப்புற மேம்பாட்டிற்காகவும், வெளிப்படையான அரசாங்க செயல்பாடுகளை அதிகரிக்கவும், விசாரணை மற்றும் உத்தியோக ஊழல்களை தண்டிக்கவும் இயக்கங்கள் அமைத்த இந்திய சமூக ஆர்வலர். இவர் பெற்ற விருதுகள் பல. இவர் பல்வேறு போராட்டங்களையும், உண்ணாவிரத போராட்டங்களையும் நாட்டு மக்கள் நலனுக்காக நடத்தியுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதில் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கான போராட்டங்கள் அதிகம். போராட்டம், உண்ணாவிரத போராட்டம், காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் என பல்வேறு போராட்டங்களை நடத்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இருப்பினும் மனம் தளராமல் மேலும் மேலும் நாட்டு மக்களுக்காக போராடி வருகிறார். இவர் நடத்திய போராட்டங்களில் ராம்லீலா மைதானத்தில் நடத்திய போராட்டம் குறிப்பிடத்தக்கது.

ஜன.1 முதல் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு!!

இப்படி போராட்டத்தையே வாழ்க்கையாக கொண்ட இவர் கடந்த சில நாட்களாக டெல்லியில் “டெல்லி சாலோ” என்ற பெயரில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தையும், இன்று நடக்கும் பாரத் பந்த் என சொல்லப்படும் முழு அடைப்பு போராட்டத்தையும் பற்றி அறிந்து, “விவசாயிகள் நலன்களுக்காக அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் போராட்டம் நாடு முழுவதும் பரவ வேண்டும்” என்று கூறி மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ராலேகன் சித்தி கிராமத்தில் தனது உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார் அன்னா ஹசாரே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here