பேரறிஞர் அண்ணா பிறந்த  நாளில் காவல்துறை, சீருடை பணியாளர்களுக்கு பதக்கம் – முதலமைச்சர்  அறிவிப்பு!!

0

பேரறிஞர் அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள் உள்பட 134 பேருக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

சமூக நீதி, மாநில உரிமை, மொழி உரிமை தொடர்பான சிந்தனையாளர், அந்த சிந்தனையை வெற்றிகரமாக அரசியல் படுத்தியவர் அறிஞர் அண்ணா. காங்கிரஸ் அல்லாத கட்சி ஒன்றின் சார்பில் இந்தியாவில் முதலமைச்சரான இரண்டாவது தலைவர். எல்லாவற்றுக்கும் மேலாக உலகில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஒரு நிலப்பரப்புக்கு ‘தமிழ்நாடு’ என்ற பெயரை சூட்டியவர் அண்ணா.

இத்தகைய பெருமைகளை கொண்ட அண்ணாவின் பிறந்த நாள் ஒவ்வொரு வருடமும் அறிஞர் செப்டம்பர் 15 அன்று கொண்டாடப்படும். பொதுவாக அண்ணாவின் பிறந்த நாள் அன்று தமிழக முதல்வரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டு அண்ணா பிறந்த நாளில்,காவல்துறை மற்றும் சீருடைப்பணியாளர்கள் உள்ளிட்ட 134 பேருக்கு ‘அண்ணா பதக்கங்கள்’ வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே சட்டப் பேரவையில் அண்ணா பிறந்தநாள் அன்று  700 ஆயுள் தண்டனை சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று முதல்வர் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here