உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி துவங்கப்பட்ட நாளிலிருந்து காரசாரமாக சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக கடந்த வாரம் அதிரடியாக 5 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுத்த நிலையில் சண்டைக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இந்த 5 போட்டியாளர்களும் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் உள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
அது போக பழைய போட்டியாளர்களான மாயா, ஐஷு, மணி சந்திரா மற்றும் அக்ஷயா ஆகியோரை சேர்த்து மொத்தம் 9 பேர் எலிமினேஷன் லிஸ்ட்டில் இருக்கின்றனர். இந்நிலையில் இந்த வாரம் வெளியேற போகும் போட்டியாளர் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் அன்னபாரதி வெளியேற இருப்பதாக கூறப்படுகிறது.