அனிருத்தின் பட வாய்ப்பை தட்டி சென்ற இசையமைப்பாளர் – மாமனார் மருமகன் இணையும் கூட்டணி !!!

0

விஜய்யின் படமான மாஸ்டர் படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோவின் எக்ஸ்பி பிலிம் பேக்டரி புது படம் ஒன்றை தயாரிக்க உள்ளது. இந்த படத்திற்கு முதலில் அனிருத்தை இசையமைப்பார் என்று எதிர்பாக்கப்பட்ட நிலையில் இப்போது அந்த வாய்ப்பை ஜிப்ரான் தன்வசப்படுத்தி உள்ளார்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

 

இந்த பெயரிடப்படாத படத்தில் நடிகர் முரளியின் மகனும் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் முரளி நடிக்கவுள்ளார். மேலும் இந்த ஆகாஷ் முரளி தான் இந்த படத்தை தயாரிக்கும் பிரிட்டோவின் மருமகன் ஆவார். பல நாட்களாக காதல் ஜோடிகளாக இருந்துவந்த பிரிட்டோவின்  மகளும்  மற்றும்  ஆகாஷ் முரளி தற்பொழுது தம்பதிகளாகியுள்ளனர்.தனது மருமகனை ஹீரோவாக்க  எக்ஸ்பி பிலிம் பேக்டரி மூலம் திரைப்படம் தயாரிக்க இவர் திட்டமிட்டுள்ளார்.

இந்த படமானது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாக உள்ளது. இவர் அஜித்தின் பில்லா,ஆரம்பம் போன்ற அதிக வசூல் செய்த திரைப்படங்களை இயக்கியவர். இந்நிலையில் இசையமைப்பாளராக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அனிருத்க்கு  பதிலாக ஜிப்ரான்  ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் ஜிப்ரானின் பின்னணி  இசை அனைவராலும் பெரிதாக பேசப்படும் நிலையில் பின்னணி இசைக்கு இந்த படத்தில் அதிக முக்கியத்துவம் இருப்பதால் அவர் ஒப்பந்தம் செய்யபட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இவர் கமல்ஹாசனின் பல படங்களுக்கு இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here