இந்தியில் கால் பதிக்க தயாராகிய அனிருத் – வாழ்த்து சொன்ன ரசிகர்கள்!!

0
aniruth

தனது தெலுங்கு படத்தின் பாடலுக்கு இந்தி ரீமேக்கில் இசையமைக்க அனிரூத் தயாராகி உள்ளார். இதனால் அனிருத் ரசிகர்கள் அவரின் பாலிவுட் பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பாலிவுட்டுக்கு தயாராகும் அனிரூத்:

நடிகர் தனுஷ் நடிப்பில், ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் உருவான 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிரூத்.  இந்த படத்தில் இவர் இசையமைப்பில் உருவான “ஒய் திஸ் கொலவெறி” பாடல் உலக அளவில் ஹிட் அடித்தது.  இதனை அடுத்து விஜய், அஜித், ரஜினி உள்ளிட்ட முன்னணி நாயகர்களின் படங்களுக்கு இசையமைக்க ஆரம்பித்தார்.

இந்நிலையில், இவரது இசையில்  கடந்த 2019-ம் ஆண்டு நானி நடிப்பில் உருவான ஜெர்சி என்ற தெலுங்கு படத்தின் பாடல் மூலம் டோலிவுட்டிலும் மிகவும் புகழப்பெற்றார்.  இதனை அடுத்து, இந்த பாடலின் ரீமேக் இந்தியில் வர உள்ளதாகவும், அதற்கு இவரே இசையமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here