பெகாசஸ் விவகாரம்: பட்டியலில் அனில் அம்பானி, தலாய்லாமா பெயர்களும் இருப்பதாக தகவல்!!

0

இஸ்ரேலை சேர்ந்த NSO என்ற தனியார் நிறுவனம் தயாரித்த உளவு மென்பொருளை பயன்படுத்தி இந்தியாவில் 40க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள், முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் இருவர், நீதிபதி ஒருவர் என கிட்டத்தட்ட 300 பேர்கள் உளவு பார்க்கப்பட்டதாக செய்தி வெளியானது.

தற்போது பெகாசஸ் விவகாரத்தில் அடுத்தடுத்து உளவு பார்க்கப்பட்டவர்களின் பெயர்கள் வெளியாகி வருகிறது. அந்தப் பட்டியலில், இந்துஸ்தான் டைம்ஸ், இந்தியா டுடே, தி இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், நியூஸ் 18  உள்ளிட்ட ஊடகங்களின் மூத்த பத்திரிகையாளர்களின் பெயர்கள் இடம்பெற்றிருக்கின்றன.

 

தற்போது சிபிஐ முன்னாள் இயக்குனர் அலோக் வர்மா, அனில் அம்பானி, தலாய்லாமா உள்ளிட்டோரும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது இஸ்ரேல் நிறுவனம் கூறியதாவது, பெகாசஸ் மென்பொருள் பயன்பாடு அரசாங்க அமைப்புகளுக்கு மட்டுமே விற்கப்பட்டதாகவும், தனி நபர்கள் யாருக்கும் விற்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தற்போது நடைபெற்று வரும் மழைக்கால கூட்டத்தொடரில் கூட இதுகுறித்த விவாதம் நடைபெற்றது. இந்தக் கூட்டத் தொடர் ஆகஸ்ட் 13–ம் தேதி வரை நடைபெறும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here