இந்த அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.., அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட மாநில அரசு!!

0
நாடு முழுவதும் உள்ள மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் தொடர்ந்து அகவிலைப்படி, ஓய்வூதியம் குறித்து பல்வேறு கோரிக்கைகளை அந்தந்த மாநில அரசுக்கு முன் வைத்து வருகின்றனர். அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பணிபுரியும் அங்கன்வாடி ஊழியர்கள் கடந்த சில நாட்களாக ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை போன்றவற்றை அமல்படுத்த வேண்டும் என தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாநில அரசு இது குறித்து முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது.

அதாவது மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையிடம் அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம், பணிக்கொடை போன்றவற்றை அமல்படுத்த வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து கூடிய விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் எனவும் தெரிவித்துள்ளனர். ஒருவேளை அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம், பணிக்கொடை போன்றவை அமல்படுத்தப்பட்டால் கிட்டத்தட்ட 2 லட்சம் பணியாளர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here