ரெண்டு மார்பகமும் இல்ல.., இடது கை செயலிழப்பு ஆயிடுச்சு.., என் நிலைமை யாருக்கும் வரக்கூடாது.., நடிகை சிந்து கண்ணீர் மல்க பேட்டி!!

0
ரெண்டு மார்பகமும் இல்ல.., இடது கை செயலிழப்பு ஆயிடுச்சு.., என் நிலைமை யாருக்கும் வரக்கூடாது.., நடிகை சிந்து கண்ணீர் மல்க பேட்டி!!
ரெண்டு மார்பகமும் இல்ல.., இடது கை செயலிழப்பு ஆயிடுச்சு.., என் நிலைமை யாருக்கும் வரக்கூடாது.., நடிகை சிந்து கண்ணீர் மல்க பேட்டி!!

“அங்காடி தெரு” படத்தில் நடித்து பிரபலமான நடிகை சிந்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியது திரையுலகத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடிகை சிந்து:

இயக்குனர் வசந்தபாலன் படைப்பில் உருவான “அங்காடி தெரு” திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை சிந்து. இவர் பல்வேறு திரைப்படங்களிலும், சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதனிடையே கடந்த 2020ம் ஆண்டு மார்பக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த இவர், மருத்துவ உதவி கேட்டு வீடியோவை வெளியீட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அதன் பின்னர் பலரும் அவருக்கு உதவி செய்துள்ளனர். அதன் மூலம் இரண்டு ஆண்டுகளை கடந்து வந்த சிந்து மீண்டும் ஒரு பேட்டியில் தான் படும் துன்பங்களைக் குறித்து பேசியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது அவர் பேசியதாவது, இரண்டு வருடங்களுக்கு முன்பு புற்றுநோய் இருப்பதை தெரிந்து கொண்டு வலது பக்கம் மார்பகத்தை அகற்றிவிட்டேன். அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தேன். ஆங்கில மருத்துவம் செட் ஆகாததால், நாட்டு மருத்துவம் பக்கம் சென்றேன். அவர்கள் கொடுத்த வைத்தியத்தில் எனக்கு 50 சதவீதம் குணமடைந்தது. இதற்கு முன்னர் கீமோதெரபி செய்ததால் என்னுடைய இடது கை நரம்பு செயலிழக்க தொடங்கியது. வலது பக்கம் மார்பகத்தை அகற்றியதால் வலது கையும் வீக்கம் அடைந்தது. இதனால் சாப்பிடவும் முடியமால், பாத்ரூம் போகவும் முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறேன்.

ஓ வயசென்ன., அவ சைசென்ன., 19 வயது நடிகையை கட்டி அணைத்த வடிவேலு.., கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!!!!

கடந்த 2,3 வருஷமாகவே எனது நண்பர்கள் மற்றும் மக்களின் உதவியோடு சமாளித்து வருகிறேன். சமீபத்தில் கூட ஒரு சீரியலில் கமிட்டானேன். ஆனால் தற்போது சில உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். எனது மற்றொரு மார்பகத்திலும் புற்று நோய் பரவியுள்ளது. என வாழ்க்கையே போராட்டமாக அமைந்து வருகிறது. இதனால் தான் என்னை கருணை கொலை செய்துவிடுங்கள் என்றும் வேஷம் ஊசி போட்டு கொன்று விடுங்கள் என்றும் கூறி வருகின்றனர்.என் நிலைமை யாருக்கும் வரக்கூடாது என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் உதவி கேட்கப் போகிறேன் என்று கண்ணீர் மல்க பேசினார். அவரின் நிலைமையை பார்த்து திரையுலகம் சோகத்தில் மூழ்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here