மன வருத்தத்தில் ‘அங்காடித் தெரு’ நடிகர்….,சினிமா வாய்ப்பை இழந்து கதறல்….,

0
மன வருத்தத்தில் 'அங்காடித் தெரு' நடிகர்....,சினிமா வாய்ப்பை இழந்து கதறல்....,
மன வருத்தத்தில் 'அங்காடித் தெரு' நடிகர்....,சினிமா வாய்ப்பை இழந்து கதறல்....,

இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘அங்காடித் தெரு’. வணிக வளாகங்கள் மற்றும் கடைகளில் பணிபுரியும் மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் நடிகர் மகேஷ் மற்றும் அஞ்சலி, சினேகா ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்புகளை பெற்றது.

இந்த திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்புகளை அடுத்து நடிகை அஞ்சலி சினிமாவில் ஒரு முக்கியமான இடத்திற்கு முன்னேறினார். ஆனால், நடிகர் மகேஷ் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தார். அவருக்கு பெரிதான வாய்ப்புகள் எதுவும் சரியாக கிடைக்கவில்லை.

IPL 2023 எலிமினேட்டர் சுற்று: டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங் தேர்வு….,

இந்த நிலையில் தனது சினிமா வாழ்க்கை குறித்து பேசிய நடிகர் மகேஷ், ‘சுந்தரபாண்டியன், ஈட்டி மற்றும் மாயாண்டி குடும்பத்தார் உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களைத் தவற விட்டு விட்டேன். அங்காடித் தெரு திரைப்படத்திற்கு பிறகு எந்த கதையை தேர்வு செய்ய வேண்டும், சினிமாவில் எப்படி நிலைத்திருக்க வேண்டும் என்று எனக்கு சொல்லித் தர யாரும் இல்லை’ என்று மனம் நொந்து கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here