ஆண்ட்ராய்டு பயனர்களே உஷார்.., உங்களை குறி வைக்கும் “சோவா வைரஸ்”.,வங்கிகள் எச்சரிக்கை!!

0
ஆண்ட்ராய்டு பயனர்களே உஷார்.., உங்களை குறி வைக்கும்
ஆண்ட்ராய்டு பயனர்களே உஷார்.., உங்களை குறி வைக்கும் "சோவா வைரஸ்".,வங்கிகள் எச்சரிக்கை!!

சோவா வைரஸ் மூலமாக ஸ்மார்ட் போனில் இருக்கும் அனைத்து டிஜிட்டல் செயலிகளின் பயன்பாட்டையும் கண்காணிக்க முடியும் என்பதால் அனைவரும் முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வங்கிகள் கூறுகின்றன.

சோவா வைரஸ் :

ஆண்ட்ராய்டு மொபைல்கள் பயன்பாடு அதிகரித்து விட்ட நிலையில், ஆன்லைன் மோசடிகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சோவா என்ற வைரஸ் தற்போது ஆட்டம் காட்டி வருகிறது. அதாவது இந்த வைரஸ் போலியான வங்கி ஆப்களை அறிமுகம் செய்கிறது. அவை மக்களால் டவுன்லோட் செய்யப்படும் போது, போலி ஆப் வங்கி வாடிக்கையாளர்களின் கணக்கு விவரங்களை திருடுகிறது. இதனால் வங்கி கணக்கில் உள்ள பணம் முழுவதும் பறிபோகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் வாடிக்கையாளர்களை எச்சரிக்கும் விதமாக கனரா வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகிய வங்கிகள் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் பாரத ஸ்டேட் வங்கி கூறுவது, வாடிக்கையாளர்கள் தேவையில்லாமல் நம்பிக்கையற்ற எந்த ஒரு ஆப்களையும் டவுன்லோடு செய்ய வேண்டாம் என எச்சரித்து உள்ளது.

அடுத்து, ஆபத்தான ஆப்களை டவுன்லோட் செய்து பின்னர், டெலிட் செய்ய முடியாது. எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஸ்டேட் பேங்க் கூறியுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘போலி sms மூலமாகவும் விவரங்கள் ஹேக்கர்களால் திருடப்படுகிறது, ஆதலால் போலி sms களை தவிர்ப்பது நல்லது என்று தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here