வெள்ளை நிற உடையில் ஏஞ்சலாக ஜொலித்த பிரபல பாடகி…வர்ணித்து தள்ளிய ரசிகர்கள்!!!

0

தமிழ் திரையில் பாடகியாக நுழைந்து பின்னர் ஒரு நடிகையாக மாறியவர் ஆண்ட்ரியா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இதில் வெள்ளை நிற உடையில் பார்ப்பவர்களின் கண்ணுக்கு ஒரு ஏஞ்சலாக காட்சி தருகிறார்.

பின்னணி பாடகி, டப்பிங் பேசுபவர் என பன்முக திறமைகளை தன்னகத்தே கொண்டவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் ஆரம்பித்து வரிசையாக ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை என அடுத்தடுத்து படங்களில் நடித்தாலும் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது தரமணி படத்தில் அவர் நடித்த ஆல்த்தியா ஜான்சன் என்ற கதாபாத்திரம் தான்.

 

அதே போல் தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை படத்தில் சந்திரா என்ற கதாபாத்திரமும் அவருக்கு நல்ல புகழை பெற்று கொடுத்தது. மேலும் இவர் படங்கள் மூலமாக மட்டுமல்லாமல் பல பிரபலங்களின் உடன் கிசுகிசுக்கப்பட்ட சர்ச்சை மூலமாகவும் இவர் பேமஸானர். அதாவது இசையமைப்பாளர் அனிருத் அவர்களுடன் இவர் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.

மேலும் இவர்கள் இருவரின் உதட்டு முத்த காட்சிகளின் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது. அதோடு மட்டுமல்லாமல் திருமணமான ஒரு நடிகருடன் தொடர்பில் இருந்ததால் தன் உடல் மற்றும் மனம் மிகுந்த அளவில் பாதித்ததாக ஒரு பேட்டியின் போது கூறி இருந்தார்.

இந்நிலையில் இவர் தற்போது தனது ஓய்வு நேரத்தை மாலத்தீவில் கழித்து வருகிறார். மேலும் அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ட்ரெண்டாகி வருகிறார்.அந்த வகையில் தற்போது வெள்ளை நிற உடையில் தேவதையாக சூரிய உதயத்திற்கு முன்பு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ஷேர் செய்து உள்ளது. இந்த புகைப்படம் ரசிகர்களை வர்ணித்து கவி பாட வைத்து உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here