மாணவர்களின் கல்வி கட்டணம் உயர்வு? தனியார் நிறுவனங்களுக்கு செக்! உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

0
மாணவர்களின் கல்வி கட்டணம் உயர்வு? தனியார் நிறுவனங்களுக்கு செக்! உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
மாணவர்களின் கல்வி கட்டணம் உயர்வு? தனியார் நிறுவனங்களுக்கு செக்! உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

மருத்துவக் கல்வி கட்டணத்தை உயர்த்துவது குறித்து தனியார் கல்லூரி நிர்வாகம் தொடர்ந்த வழக்கில், கட்டணத்தை ரத்து செய்த அரசின் இறுதி முடிவு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நீதிமன்றம் தீர்ப்பு :

ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள நாராயணா மருத்துவக் கல்லூரி, சமீபத்தில் தங்கள் மருத்துவக் கல்லூரியின் கல்வி கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியது. கல்லூரி நிறுவனத்தின் இந்த, முடிவை ரத்து செய்வதாக ஆந்திர அரசு அறிவித்தது. இதனால் கல்லூரி நிர்வாகம், உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம் ஆர் ஷா மற்றும் சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக அரசு எடுத்த முடிவு செல்லும் என்றும், சம்பந்தப்பட்ட தனியார் நிர்வாகத்திற்கு 5 லட்சம் அபராதம் விதிப்பதாகவும் தீர்ப்பளித்தது.

பள்ளிகளில் 8000 ஆசியர்கள் பணியிடங்களை ரத்து செய்து உத்தரவு – மாநில அரசு அதிரடி அறிவிப்பு!!

இது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், ஆண்டுக்கு ரூபாய் 24 லட்சம் வரை கல்லூரி கட்டணத்தை உயர்த்துவது நியாயமானது அல்ல என்றும், கல்வி என்பது வியாபாரமயமாக்கப்படக்கூடாது என்றும் எச்சரித்தது. சம்பந்தப்பட்ட தனியார் கல்லூரி நிர்வாகம் இன்னும் 6 வார காலத்திற்குள் அபராத தொகையை நீதிமன்ற பதிவேட்டில் டெபாசிட் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here