மாநிலத்தில் புதிதாக உதயமாகும் 13 மாவட்டங்கள் – மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் நியமனம்!!

0
மாநிலத்தில் புதிதாக உதயமாகும் 13 மாவட்டங்கள்

ஆந்திர மாநிலத்தில், நிர்வாக காரணங்களுக்காக புதிதாக 13 மாவட்டங்கள் உதயமாக உள்ளதால், மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டங்கள் உதயம்:

கடந்த 2019 ஆம் ஆண்டு, சட்டமன்ற தேர்தலின் போது தற்போது ஆளும் கட்சியாக உள்ள ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, தான் வெற்றி பெற்றால், ஒவ்வொரு மக்களவைத் தொகுதியில் ஒரு மாவட்டமாக உருவாக்கப்படும் என வாக்குறுதி கொடுத்தார். அதன்படி மாவட்டத்தில் தற்போது, 13 மாவட்டங்கள் புதிதாக உதயமாகிறது. இதையடுத்து, மாநிலத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கான அரசாணை அண்மையில் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது இந்த செயல் முறை நடைமுறைக்கு வந்துள்ளது. திருப்பதியை மாவட்ட தலைமையகமாக கொண்டு ஸ்ரீ பாலாஜி மாவட்டம் மற்றும் விஜயவாடாவை மாவட்ட தலைமையகமாகக் கொண்டு என்டிஆர் மாவட்டம் அமைகிறது. ஸ்ரீ பாலாஜி மாவட்டத்தின் கலெக்டராக வெங்கட்ரமணா ரெட்டி, மற்றும் மாவட்ட கண்காணிப்பாளராக பரமேஸ்வரன் ஆகியோர் இன்று பொறுப்பு ஏற்கின்றனர். அவர்களின் பதவி ஏற்புகான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here