வித்தியாசமான சுவையில் “ஆந்திரா ஸ்டைல் இறால் பிரை” – செஞ்சு தான் பாருங்களேன்!!

0

உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியினை வழங்குவதில் இறாலுக்கு இணை வேறு எதுவுமே கிடையாது. அதே போல் இறால் எலும்புகளுக்கு வலுவினையும் அளிக்கிறது. இப்படியாக இருக்க, இன்று “ஆந்திரா ஸ்டைல் இறால் பிரை” ரெசிபி எப்படி செய்வது என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்..!!

தேவையான பொருட்கள்

  • இறால் – 200 கிராம்
  • பிரிஞ்சி இலை – 1
  • பட்டை – 1
  • ஏலக்காய் – 3
  • மிளகு – 1 டீஸ்பூன்
  • வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
  • கருவேப்பில்லை – தேவையான அளவு
  • மஞ்சள் தூள் – 2 டீஸ்பூன்
  • உப்பு – 2 டீஸ்பூன்
  • கரம் மசாலா – 2 டீஸ்பூன்
  • இஞ்சி & பூண்டு விழுது –
  • மல்லி தூள் – 2 டீஸ்பூன்
  • சீரக தூள் – 1 1/2 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
  • தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
  • பச்சை மிளகாய் – 3
  • கொத்தமல்லி – தேவையான அளவு
  • எண்ணெய் – 3 டீஸ்பூன்

செய்முறை

முதலில், இறாலை நன்றாக கழுவி எடுத்து கொள்ள வேண்டும். பின், ஒரு சட்டியினை காய வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, அதில் இறால் மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து கிண்ட வேண்டும். இறால் பொன்னிறமாக வந்ததும் அதனை தனியாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும். பின், ஓவர் காடையை காய வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, பிரிஞ்சி இலை, பட்டை, மிளகு, ஏலக்காய், கிராம்பு, சீரகம் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.

“மக்களின் நாயகன்” சோனு சூட்டிற்கு கொரோனா தொற்று – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

பின், இதில் வெங்காயம் மற்றும் இஞ்சி & பூண்டு விழுதினை சேர்க்க வேண்டும். இந்த கலவையை நன்றாக வதக்க வேண்டும். பின், இதில் மல்லி தூள், சீரக தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிண்டி விட வேண்டும். பின், இதில் எடுத்து வைத்துள்ள தக்காளியை சேர்க்க வேண்டும். 7 முதல் 8 நிமிடங்கள் வரை இந்த கலவையினை முடி வைத்து விட வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பின், சிறிதளவு தண்ணீர் சேர்க்க வேண்டும். நன்றாக வதங்கியதும், அதில் எடுத்து வைத்துள்ள இறாலை போட்டு நன்றாக கிண்டி விட வேண்டும். தீயை குறைத்து வைத்து விட்டு முடி வைத்து விட வேண்டும். 15 நிமிடங்கள் இந்த கலவையினை அப்படியே வைத்து விட வேண்டும். கடைசியாக, இதில் கருவேப்பில்லை, கொத்தமல்லி, கரம் மசாலா, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். சூடான சாதத்துடன் இதனை பரிமாறலாம். அவ்ளோ தான்!!

சுவையான “ஆந்திரா ஸ்டைல் இறால் பிரை” ரெடி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here