உலக கோப்பையில் இந்தியாவின் தோல்வியால் இளைஞர் மரணம்.. வெளியான அதிர்ச்சி தகவல்.!

0
உலக கோப்பையில் இந்தியாவின் தோல்வியால் இளைஞர் மரணம்.. வெளியான அதிர்ச்சி தகவல்.!
உலக கோப்பையில் இந்தியாவின் தோல்வியால் இளைஞர் மரணம்.. வெளியான அதிர்ச்சி தகவல்.!

ஐசிசி சார்பாக நடத்தப்பட்டு வரும் ODI உலக கோப்பை தொடர் நேற்றுடன் (நவம்பர் 19) சிறப்பாக நிறைவடைந்தது. இத்தொடரின் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரிட்சை நடத்தினர். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை உச்சி முகர்ந்தது. இதையடுத்து இந்திய அணியின் தோல்வியால் ஓர் இளைஞனின் உயிர் பறிபோய் உள்ளது. அதாவது, ஆந்திரப் பிரதேச மாநிலம் திருப்பதியை சேர்ந்தவர் ஜோதி குமார் என்பவர் இந்திய அணி உறுதியாக வெற்றி பெறும் என நம்பி உள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

இதனால், ஆர்வத்துடன் தொலைக்காட்சியில் போட்டியை பார்த்துள்ள இவர், ஒரு கட்டத்தில் இந்தியா தோல்வியை நோக்கி செல்லும் பொழுது கடும் மன சோர்வுக்கு ஆளாகியுள்ளார். இதன் தொடர்ச்சியாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட, குடும்பத்தினர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு காரணமாக அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதைக் கேட்ட குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர். உலக கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவின் தோல்வியால் ஓர் இளைஞர் உயிரிழந்திருப்பது அப்பகுதி மட்டுமின்றி அனைவருக்குமே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யூடியூபர் டிடிஎப் வாசனுக்கு அடுத்த செக் .., கிடைக்குற இடத்துல எல்லாம் ஆப்பு வைக்கும் நீதிமன்றம்.., ரசிகர்கள் ஷாக்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here