ஆந்திராவில் பரவிய மர்ம நோய்க்கு காரணம் இது தான் – என்ஐஏ வல்லுநர்கள் அதிர்ச்சி தகவல்!!

0

ஆந்திராவில் ஏற்பட்ட மர்ம நோய்க்கு குடிநீரில் உள்ள வேதிப்பொருள் தான் காரணம் என் கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது தண்ணீரில் ஏதும் இல்லை எனவும்,அரிசியில் கலந்திருக்கும் பாதரசமும் காய்கறிகளில் அதிக அளவில் இருந்த பூச்சிக்கொல்லிகள் தான் காரணம் என்று என்என்ஐ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

மர்ம நோய் காரணம்:

ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டம் எலூரி நகரில் கடந்த 6-ம் தேதி முதல் மர்ம நோய் ஒன்று பரவிவருகிறது. மக்கள் வலிப்பு போன்ற அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வலிப்புடன் நுரை நுரையாக வாந்தி எடுக்கின்றனர் மேலும் எதோ விசித்திர குரலில் சத்தமிடுகிறார்கள். இதுவரை 600-க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் 3 பேர் பலியாகியுள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதுகுறித்து அவர்களது ரத்தம் ஆய்விற்கு அனுப்பப்பட்டது. அதில் வேதி பொருள்கள் கலந்திருப்பதாகவும் அவர்கள் அருந்தும் பாலை சோதனை செய்து பார்த்தனர். அதில் எவ்வித கலப்படமும் இல்லை எனவும் பின் தண்ணீரில் உள்ள அதிகப்படியான வேதிப்பொருள் தான் காரணமாக இருக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் அவர்களின் ரத்த மாதிரிகளில் ஈயம் மற்றும் நிக்கலின் தடயங்களைக் டெல்லி எய்ம்ஸ் மற்றும் இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனம் கண்டுபிடித்துள்ளன. ஆனால் அவர்களது தண்ணீரில் எந்த வேதிப்பொருளும் இல்லை எனவும், பின் அவர்களது உணவு மாதிரிகளை சேகரித்து சோதனை செய்த ஹைதராபாத் தேசிய ஊட்டச்சத்து நிறுவன (என்ஐஎன்) வல்லுநர்கள் அரிசியில் கலந்திருக்கும் பாதரசமும் காய்கறிகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் இருந்த பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகள் தான் காரணம் என்று தெரிவித்துள்ளனர். இதனால் அந்த மாவட்டத்தில் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here