Tuesday, April 20, 2021

ஆந்திராவில் பரவும் மர்ம நோய் – கொரோனா கிருமிநாசினி தான் காரணமா??

Must Read

ஆந்திர மாநிலத்தில் மக்கள் அதிக அளவில் மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் அதிகளவு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது தான் காரணமாக இருக்குமோ? என்ற வகையில் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

மர்ம நோய்:

ஆந்திரா மாநிலத்தில் உள்ள எலூர் என்ற பகுதியை சேர்ந்த ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன் தலைசுற்றல், மயக்கம் மற்றும் நடுக்கம் உள்ளது என்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்த மாதிரிகள் சோதிக்கப்பட்டன. அதில் அவருக்கு கொரோனா இல்லை என்பது உறுதியானது. இதனை அடுத்து அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவர் அனுமதிக்கப்பட்டதை அடுத்து தொடர்ச்சியாக அந்த கிராமத்தை சேர்ந்த 200க்கும் அதிகமானோர் மர்ம நோய் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டார்கள். இதனால் ஆந்திரா மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டது. எதனால் இந்த நோய் பரவுகிறது என்று யாருக்கும் காரணம் தெரியாததால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவ குழு பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகளை சோதனை செய்ய ஆரம்பித்தனர். அவர்களது ரத்தத்தில் நிக்கல் மற்றும் காரீயம் இருப்பது கண்டறியப்பட்டது.

சித்ரா மரணத்திற்கு ஹேமந்தும், அவரது தாயாருமே காரணம்!!

தண்ணீர் மற்றும் பால் போன்ற பொருட்களில் கலப்படம் இருக்குமோ என்று சந்தேகம் அடைந்து அத்தனையும் சோதனை செய்தனர். ஆனால், பால் மற்றும் தண்ணீர் போன்றவற்றில் எந்த கலப்படமும் இல்லை என்பது உறுதியானது. இதனை அடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தெளிக்கப்பட்ட கிருமிநாசினி தான் காரணமாக இருக்குமோ? என்ற கோணத்தில் விசாரணையை நடத்தி வருகின்றனர். இது குறித்து விரைவாக காரணம் கண்டுபிடிக்கப்படும் என்றும் அதற்கு தகுந்தாற் போல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

பூவரசியை கதிருடன் சேர்த்து வைக்க புதிய திட்டம் தீட்டும் ரத்னவள்ளி – சூடுபிடிக்கும் ‘பூவே உனக்காக’!!

பூவே உனக்காக சீரியல் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. பூவரசி தொடர்ந்து அடம் பிடித்து வரும் நிலையில் பூவராசியின் அம்மாவும் அப்பாவும் ஒரு முடிவை எடுக்கின்றனர்....
- Advertisement -

More Articles Like This

- Advertisement -