மாநிலத்தில் செப்டம்பர் 30 வரை இரவு ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் அதிரடி!!

0
மாநிலத்தில் செப்டம்பர் 30 வரை இரவு ஊரடங்கு நீட்டிப்பு - முதல்வர் அதிரடி!!
மாநிலத்தில் செப்டம்பர் 30 வரை இரவு ஊரடங்கு நீட்டிப்பு - முதல்வர் அதிரடி!!

ஆந்திர மாநிலத்தில் தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் செப்டம்பர் 30 வரை இரவு நேர ஊரடங்கை நீட்டிப்பதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

இரவு நேர ஊரடங்கு நீட்டிப்பு:

நாட்டில் கோவிட்19 மூன்றாம் அலை பரவல் குறித்த பயம் இருப்பதால்,இதுவரை அமலில் இருந்த இரவு நேர ஊரடங்கு அதாவது , இரவு 11 மணி முதல் காலை 6 மணி இருந்த ஊரடங்கு இரவு 10 மணி முதல் காலை 6 மணி என மாற்றப்படுவதாக ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அண்மையில் தெரிவித்து இருந்தார். மேலும், திருமணம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் விழாக்களில் 150 நபர்களுக்கு மேல் பங்கேற்க கூடாது எனவும் உத்தரவிட்டிருந்தார். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் கொரோனாவின் மூன்றாம் அலை குறித்த பயம் இருப்பதால் மேற்கொள்ளப்பட்டதாக அறிவித்தார்.

மாநிலத்தில் செப்டம்பர் 30 வரை இரவு ஊரடங்கு நீட்டிப்பு - முதல்வர் அதிரடி!!
மாநிலத்தில் செப்டம்பர் 30 வரை இரவு ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் அதிரடி!!

இந்த நிலையில், மாநிலம் முழுவதும் பிறப்பிக்கப்பட்ட இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் செப்டம்பர் 16 முதல் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதோடு சேர்த்து கோவிட்19 தடுப்பு குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளும் பின்பற்ற வேண்டும் என ஜெகன் மோகன் ரெட்டி கேட்டுக் கொண்டார். மூன்றாம் அலை குழந்தைகளை தாக்கும் என்ற பயம் இருப்பதால் அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். தடுப்பூசி செலுத்தாதவர்கள் விரைந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

மாநிலத்தில் செப்டம்பர் 30 வரை இரவு ஊரடங்கு நீட்டிப்பு - முதல்வர் அதிரடி!!
மாநிலத்தில் செப்டம்பர் 30 வரை இரவு ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் அதிரடி!!

மேலும், மருத்துவமனைகளில் படுக்கை மேலாண்மை, குளியலறை பராமரிப்பு, சுகாதாரம் மற்றும் உணவு தரம் மற்றும் வரவேற்பு சேவைகள் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்துமாறு சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதுமட்டுமில்லாமல், மாநிலத்தில் 20,964 ஆக்சிஜன் படுக்கைகள் தயார் நிலையில் இருப்பதாகவும், 27, 311 D வகை ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் இந்த அறிவிப்பால் ஆந்திர மாநில மக்கள் மிகுந்த பதற்றத்தில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here