இனி அனைத்து கல்லூரிகளிலும் ஆங்கில பாடம் கட்டாயம்… மாநில அரசு திடீர் அறிவிப்பு!!!

0

2021- 22 ஆம் கல்வியாண்டு முதல் அனைத்து கல்லூரிகளின் பட்டப்படிப்புகளுக்கும் இனி ஆங்கில பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக ஆந்திர பிரதேச அரசு அறிவித்துள்ளது.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் பட்டதாரிகளின் தொழில் வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக 2021-22 ஆம் கல்வியாண்டு முதல் அனைத்து கல்லூரி பட்டப்படிப்புகளுக்கும் ஆங்கில பாடம் கட்டாயமாக்கப்படுவதாக அம்மாநில அரசு தற்போது ஒரு அறிவிப்பை விடுத்துள்ளது. இளங்கலை (Under Graduate Courses) மட்டத்தில் ஆங்கிலக் கல்வியை அறிமுகப்படுத்துவது குறித்த இந்த அறிவிப்பை ஆந்திர உயர்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பில் ஆந்திராவில் உள்ள அனைத்து அரசு, தனியார் உதவி மற்றும் உதவி பெறாத கல்லூரிகளின் பட்டப்படிப்புகளுக்கும் ஆங்கிலப்பாடம் கட்டாயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஆந்திர அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஆறாம் வகுப்புகளுக்கு ஆங்கிலப்பாடத்தை கட்டாயம் என உத்தரவிட்டதற்கு மாநில உயர்நீதிமன்றம் தடை விதித்தது என்பது குறிப்பிடதக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here