ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று – அலறும் மாநில அரசு!!

0
Corona Treatment
Corona Treatment

ஆந்திர மாநிலத்தில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவு 10 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது.

கொரோனா பாதிப்பு:

ஆந்திர மாநிலத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்களின் தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. அங்கு கொரோனா பரவல் தொடங்கிய காலத்தில் இருந்தே பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கொரோனவால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு நிவாரண உதவிகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களுக்கு 30 நிமிடங்களில் மருத்துவமனை படுக்கை வசதி, உயிரிழந்தவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்ய 15 ஆயிரம் ரூபாய் நிதியுதவி போன்றவை அறிவிக்கப்பட்டன.

M.Phil படிப்புகள் நிறுத்தம் – புதிய கல்வி கொள்கை விபரங்கள் அறிவிப்பு!!

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

இந்நிலையில் அம்மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 10,093 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது பொதுமக்கள் மற்றும் தடுப்புப்பணி அதிகாரிகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ஆந்திராவில் மொத்தமாக 1,20,390 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. 55,406 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும் 1,213 பேர் உயிரிழந்து உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here