யூனியன் பிரதேசத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் – அச்சத்தில் உறைந்து போன மக்கள்!!

0

அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால், அங்குள்ள மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

நில அதிர்வு :

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸின் தாக்கமே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், பல இயற்கை சீற்றங்களும் மக்களை பதம் பார்த்து வருகின்றது. அந்த வகையில், இந்தியாவின் யூனியன் பிரதேசமாக உள்ள அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு சக்தி வாய்ந்த நில அதிர்வு உணரப்பட்டது. இதனால், அங்குள்ள மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இந்த நில அதிர்வு, அந்த தீவின் போர்ட் பிளேர் நகரின் தென் கிழக்கே 165 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டதாக  தேசிய புவியியல் மையம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 4.3 என பதிவாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஏதேனும் பொருட் சேதம் ஏற்பட்டதா? என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை. இதனால் அந்த  தீவில் மிகுந்த பதற்றம் காணப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here