பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பெப்சி உமா.., இனி இவருக்கு இந்த கதாபாத்திரம் தான்.., சூப்பர் அப்டேட்!!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பெப்சி உமா.., இனி இவருக்கு இந்த கதாபாத்திரம் தான்.., சூப்பர் அப்டேட்!!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ”பெப்சி உங்கள் சாய்ஸ்” என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் தான் உமா. தனது பள்ளிப்படிப்பை முடித்த இவர் தூர்தர்ஷனில் ஆங்கராக களமிறங்கியுள்ளார். இதை தொடர்ந்து தான் ‘பெப்சி உங்கள் சாய்ஸ்’ ஷோவுக்கு தொகுப்பாளராக வந்து ரசிகர்களின் மனதில் தனக்கென தனியிடம் பிடித்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் இந்த நிகழ்ச்சியை இவர் தொகுத்து வழங்கிய விதம், இவருடைய மென்மையான குரல், சிரிப்பு போன்றவைகளால் ரசிகர்களை கவர்ந்து 90 கிட்ஸ்களின் favorite தொகுப்பாளராக உருவாகினார். இப்படி 15 வருடமாக இந்த ஷோவை தொகுத்து வழங்கி வந்த இவர் கடந்த பல வருடங்களாக சினிமாவில் இருந்து மிகப்பெரிய கேப் எடுத்திருந்தார்.

CSK vs LSG போட்டியின் நடுவே மழை குறிக்கிடு…, தற்காலிகமாக ஆட்டம் நிறுத்தம்!!

இந்த நிலையில் தான் போன மாதம் நடந்த AWARD நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார். மேலும் அதில் நான் எங்கேயும் போகவில்லை, கூடிய விரைவில் சின்னத்திரைக்கு நான் என்ட்ரி கொடுக்க இருக்கிறேன் என்ற சூப்பர் அப்டேட்டை கொடுத்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் எந்த சீரியலில் நடிக்க போகிறார் என்ற அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தான் நடிக்க இருக்கிறாராம். அதாவது, ஐஸ்வர்யா-கண்ணன் இப்பொழுது யூடியூப் சேனலில் வீடியோ போட்டு பிரபலமாகி வருகின்றனர். அவர்களை இன்டெர்வியூ எடுக்கும் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் துவண்டு கிடக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் டிஆர்பி ரேட்டிங் எகிற வாய்ப்பு அதிகம் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here