தனது சொந்த தம்பியுடன் முதல் முறையாக புகைப்படம் வெளியிட்ட தொகுப்பாளினி டிடி – நீங்களே பாருங்க!

0
தனது சொந்த தம்பியுடன் முதல் முறையாக புகைப்படம் வெளியிட்ட தொகுப்பாளினி டிடி - நீங்களே பாருங்க!

விஜய் டிவி பிரபலமான தொகுப்பாளினி டிடி தனது தம்பியுடன் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தொகுப்பாளினி டிடி:

தனியார் தொலைக்காட்சியான விஐய் டிவியில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பாளினியாக வலம் வந்தவர் தான் திவ்யதர்ஷினி. இவர் அதிகமான நிகழ்ச்சிகளை அந்த சேனலில் தொகுத்து வழங்கி இருக்கிறார். அதன் வரிசையில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது காஃபி வித் டிடி மற்றும் ஜோடி நம்பர் 1 தான். மேலும் இவர் விசில் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார் டிடி. அந்த வகையில் தனது தம்பியுடன் சேர்ந்து இருந்த பல புகைப்படங்களை அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். மேலும் இந்த பதிவில் தனது தம்பி சுதர்ஷனுக்கு பிறந்தநாள் வாழ்த்தையும் தெரிவித்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்களுக்கு டிடி-யின் சகோதரருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here