விவாகரத்தை குறித்து மனம் திறந்த தொகுப்பாளினி டிடி – வைரலாகும் வீடியோ!!

0

விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தனது முதல் திருமணம் மற்றும் விவாகரத்து குறித்து முதல் முறையாக மனம் திறந்துள்ளார். வலைதளத்தில் வெளியான இவரது பதிவு ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது.

தொகுப்பாளினி திவ்யதர்ஷினி

ரசிகர்களால் செல்லமாக டிடி என்று அழைக்கப்படுபவர் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. குழந்தை நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமான இவர் கடந்த 22 வருடங்களாக சின்னத்திரையில் பணியாற்றி வருகிறார். நடன நிகழ்ச்சி, பாடல் நிகழ்ச்சி, விளையாட்டு நிகழ்ச்சி, ரியாலிட்டி ஷோ உட்பட கிட்டத்தட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார் திவ்யதர்ஷினி.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நிகழ்ச்சி தொகுப்பாளினிகளில் அதிகமான ரசிகர்களை சம்பாதித்து வைத்திருப்பவர் டிடி. திரையுலக வாழ்க்கை இவருக்கு அதிக சந்தோஷங்களையும், பேரையும், புகழையும் சம்பாதித்து தந்தாலும் டிடியின் திருமண வாழ்க்கை தோல்வியிலேயே முடிந்தது.

சில ஆண்டுகளுக்கு முன்பு தனது நீண்ட கால நண்பரான ஸ்ரீகாந்த் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார் டிடி. ஆரம்பத்தில் டிடியின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றாலும், இருவருக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் காணப்பட்டது. அதனால் திருமணமான இரண்டு வருடங்களிலேயே டிடி தனது கணவரை விவாகரத்து செய்தார்.

விஜய் டிவியில் முடிவுக்கு பிரபல சீரியல் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

தனது முதல் திருமணம் குறித்தும் விவாகரத்து குறித்தும் இதுவரை மௌனம் சாதித்து வந்த டிடி, தற்போது முதல் முறையாக விவாகரத்து குறித்து மனம் திறந்துள்ளார். இன்று பெண்கள் தினத்தை ஒட்டி தொகுப்பாளினி டிடி வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அந்த பதிவில், 36 வயதாகிவிட்டது, சிங்கிளாக இருக்கிறேன். 36 வயதாகிவிட்டது விவாகரத்தும் ஆகி விட்டது. 36 வயதாகிவிட்டது ஆனாலும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என கூறியுள்ளார். டிடியின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here