பொய்யா நடிக்கிறீங்கன்னு அப்பட்டமா தெரியுது – அர்ச்சனாவை கிழிக்கும் நெட்டிசன்கள்!!

0

பிக் பாஸ் 4 நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வெறுப்பினை சம்பாரித்தவர் தான், தொகுப்பாளினி அர்ச்சனா. தற்போது அவர் தனது மகளுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ரிலிஸினை செய்துள்ளார்.

தொகுப்பாளினி அர்ச்சனா

ஒரு காலத்தில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றவர்களாக தொகுப்பாளர்கள் இருந்தனர். தங்களது எதார்த்தமான மற்றும் குறும்பான பேச்சின் மூலமாக மக்கள் மத்தியில் மிகுந்த மதிப்பினை பெற்றிருந்தனர். அந்த வகையில், அனைவர் மத்தியிலும் ஒரு காலத்தில் பெரும் வரவேற்பினை பெற்றுயிருந்தவர் தான், தொகுப்பாளினி அர்ச்சனா.

இவர் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் தனது தொகுப்பாளினி பணியினை செய்து வருகிறார். இவர் முதன் முதலாக “இளமை புதுமை” என்ற சன் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலமாக தான் தொகுப்பாளராக அறிமுகமானார். அதன் பிறகு பல நிகழ்ச்சிகளில் இவர் தொகுப்பாளினியாக இருந்து வந்தார்.

லட்சுமியை அழைத்து கொண்டு சௌந்தர்யாவுடன் போட்டிக்கு செல்லும் கண்ணம்மா – உண்மை தெரியவருமா??

அதன் பிறகு, நீண்ட இடைவேளைக்கு பிறகு கடந்த 2016 ஆம் ஆண்டு “சரிகமப” நிகழ்ச்சியின் மூலமாக மீண்டும் தொகுப்பாளினியாக பணியாற்றினார். இதனை அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான “பிக் பாஸ் 4” நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்றார். இந்த போட்டியில் இவர் அன்பு கேங் என்று ஒன்றினை உருவாக்கி பலரையும் விளையாட முடியாதபடி செய்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் மக்கள் அனைவரும் இவரை வெறுத்தனர். இதனை அடுத்து இவர் தற்போது விஜய் டிவியில் நடைபெறும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வருகிறார். இப்படியாக இருக்க அர்ச்சனா தனது மகள் சாராவுடன் இருக்கும் ஒரு விடீயோவினை பதிவிட்டுள்ளார். தனது மகளுடன் “டெடி” திரைப்படத்தில் வரும் டெடி ரைம்ஸ் பாடலுக்கு நடமாடியுள்ளனர். இந்த விடீயோவினை சிலர் வரவேற்றுள்ளனர். சிலர் கேவலமாக கழுவி ஊற்றி வருகின்றனர்.  அன்பு கேங் என்று பிக் பாஸில் வலம் வந்த இவரை தற்போது விடாமல் கலாய்த்து வருகின்றனர். இந்த வீடியோவில் சாராவுடம் இருக்கும் அன்பாவது உண்மை தானா?? என்று கமன்ட் செக்சனில் கேட்டு வருகின்றனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

முழு விடீயோவினை கிளிக் செய்யவும்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here