விஜய் டிவி தொகுப்பாளினிக்கு கிடைத்த முக்கிய அங்கீகாரம்.., அவரே வெளியிட்ட பதிவு!!

0
விஜய் டிவி தொகுப்பாளினிக்கு கிடைத்த முக்கிய அங்கீகாரம்.., அவரே வெளியிட்ட பதிவு!!
விஜய் டிவி தொகுப்பாளினிக்கு கிடைத்த முக்கிய அங்கீகாரம்.., அவரே வெளியிட்ட பதிவு!!

தொலைக்காட்சி டிவியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் திவ்யதர்ஷினி. இவர் விஜய் டிவியில் தொகுத்து வழங்கிய காபி வித் டிடி, ஜோடி நம்பர் ஒன் போன்ற நிகழ்ச்சிகள் பட்டிதொட்டியெல்லாம் ரீச் ஆனது. மேலும் படபடவென பேசும் அவருடைய பேச்சுக்கு இன்றும் எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தற்போது இவர் நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் காப்பி வித் காதல் என்ற படத்தில் லீடு ரோலில் நடித்துள்ளார். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படுதோல்வி அடைந்து மண்ணை கவ்வியது. இதனை தொடர்ந்து ஜோஷ்வா இமை போல் காக்க மற்றும் துருவ நட்சத்திரம் போன்ற படங்களில் கமிட்டாகியுள்ளார்.

கோலிவுட்டை ஓரங்கட்டி பாலிவுட்டில் கூட்டணி வைத்த விஜய் சேதுபதி.., இது என்ன புது அவதாரமா இருக்கே!

ஆனால் இந்த படம் தற்போது வரை கிடப்பில் இருந்து வருகிறது. இப்படி நடிப்பு, தொகுப்பாளினி என பிசியாக இருந்து வந்தாலும் தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அதன்படி தனது புகைப்படங்கள், வீடியோக்கள் பதிவிட்ட வண்ணம் இருக்கிறார். அந்த வகையில் தற்போது ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

அதாவது ஐக்கிய அரபு அமீரகம் டிடிக்கு கோல்டன் விசா வழங்கியுள்ளது. அதற்கு நன்றி கூறும் விதமாக ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். மேலும் த்ரிஷா, விஜய் சேதுபதி, அமலாபால், மீனா மற்றும் இயக்குனர் விஜய் ஆகியோருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here