‘அன்புடன் குஷி’ சீரியலில் இணையும் ‘ஸ்ரேயா’ – வைரலாகும் ஷூட்டிங் புகைப்படங்கள்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ‘அன்புடன் குஷி’ சீரியலில் இருந்து ரேஷ்மா விலகியதை அடுத்து தற்போது திருமணம் சீரியல் நடிகை ஸ்ரேயா நடிக்க உள்ளார். அதற்கான ஷூட்டிங் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘அன்புடன் குஷி’

அன்புடன் குஷி சீரியல் தொடர்ந்து முன்னணி சீரியல்களில் ஒன்றாக முன்னேறி கொண்டுள்ளது. ஆரம்பத்தில் இந்த சீரியல் ஓடவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு ப்ரஜின், ரேஷ்மாவின் ஜோடி பொருத்தம் பிடித்து போக நாளடைவில் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தது. இந்நிலையில் இந்த சீரியலில் இருந்து ரேஷ்மா அதிரடியாக வெளியேறினார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால்ரசிகர்கள் பலரும் ஷாக்காகினர். ஆனால் அந்த சீரியலில் அடுத்த அப்டேட்டை கேட்ட பலரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கலர்ஸ் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த திருமணம் சீரியலில் நடித்த ஸ்ரேயா இதில் நடிக்க போவதாக தகவல் வெளியானது. ஏற்கனவே திருமணம் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்.

இந்நிலையில் தற்போது அவர் விஜய் டிவியில் கால் பதித்துள்ளார். ஏற்கனவே சித்து ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வருகிறார். இப்பொழுது ஸ்ரேயாவும் களமிறங்கி விட்டார். தற்போது அன்புடன் குஷி படத்தின் ஷூட்டிங் புகைப்படங்கள் யாவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here