ஷூட்டிங் ஸ்பாட்டில் செம குத்தாட்டம் போட்ட ராஜா ராணி சீரியல் நாயகனின் ரியல் காதலி… வைரலாகும் ரீல்ஸ் வீடியோ!!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்புடன் குஷி சீரியலில் குஷியாக நடித்து வருபவர் ஸ்ரேயா அஞ்சன். இவர் மற்றும் அந்த சீரியலில் அவருடன் நடித்து வரும் மற்ற நடிகர்களுடன் சேர்ந்து ஹிந்தி பாடலுக்கு  குத்தாட்டம் போட்ட வீடியோவை ஸ்ரேயா அஞ்சன் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் விஜய் டிவியில் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் அன்புடன் குஷி. இதில் பிரஜின் என்பவர் அன்பு என்ற கதாபாத்திரத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். இந்த சீரியலில் இது வரை இரண்டு நாயகிகள் மாற்றப்பட்டு தற்போது ஸ்ரேயா அஞ்சன் என்பவர் குஷி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ராஜஸ்தானி குடும்பத்தை சேர்ந்த அன்புவின் முதலாளி பெண் குஷியை விதியின் விளைவாக அன்பு திருமணம் செய்து கொள்கிறார். அதன் பிறகு நடைபெறும் சம்பவங்களை வைத்து கதை நகர்கிறது.

இந்த சீரியலில் குஷியாக நடிக்கும் ஸ்ரேயா அஞ்சன் வேற யாரும் இல்லை கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பான திருமணம் சீரியலில் நடித்து புகழ் பெற்றவர் தான். மேலும் இவர் விஜய் டிவியில் வரும் ராஜா ராணி சீரியலில் சரவணனாக நடித்து வரும் சிந்துவின் வருங்கால மனைவி ஆகும். இந்நிலையில் இந்த அன்புடன் குஷி சீரியலை சேர்ந்த ஒரு சில நட்சத்திரங்கள் ஹிந்தி பாடலுக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் செம ஆட்டம் போட்டு உள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here