தனது தங்கையுடன் ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போடும் அன்பே வா சீரியல் நடிகை… ட்ரெண்டாகும் வீடியோ!!!

0

சன் டிவி அன்பே வா சீரியல் பூமிகாவாக புகழ் பெற்று வருபவர் டெல்னா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் டெல்னாவும் தனது ரீல் தங்கையுடன் சேர்ந்து நடனமாடி உள்ளார்.

அப்பா பாசம் கிடைக்காமல் வளர்ந்து வரும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பூமிகா என்ற பெண்ணுக்கு வருண் என்ற பணக்கார பையனின் காதல் மூலம் இவை அனைத்தும் ஒரு சேர கிடைக்கிறது. இந்நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். இதையடுத்து பூமிகா ஒரு நடுத்தர ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண் என்பதால் வருணின் அம்மா அவரை வெறுக்கிறார். மேலும் அவரை வீட்டை விட்டு வெளியேற்ற பல சதி வேலைகளை செய்து வருகிறார்.

எதுவும் பயன் இல்லாததால் பூமிகாவிடம் வருண் ஒன்று சேர கூடாது என சத்தியம் வாங்கி உள்ளார். இந்த சத்தியத்தை கடந்து தனது காதல் கணவருடன் பூமிகா இணைந்து வாழ்வாரா? அல்லது மீண்டும் வருணின் அம்மாவின் சூழ்ச்சி வலையில் சிக்கி தவிப்பாரா? என்பதே இந்த சீரியலின் மீதி கதை. இந்த சீரியலில் பூமிகாவாக நடித்து வரும் டெல்னா திரைப்படங்கள் மூலம் அறிய வந்தவர்.

பஞ்சு மிட்டாய் கலரு...தேன் மிட்டாய் உதடு... அன்பே வா சீரியல் நாயகி பூமிகாவின் புதிய அவதாரம்!!!

திரைப்படங்களை விட சீரியல்களில் தான் இவருக்கு மவுசு அதிகமாக கிடைத்து உள்ளது. இந்நிலையில் இவர் அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோவை ஷேர் செய்து உள்ளார். அந்த வீடியோவில் பரமசுந்தரி மற்றும் சொப்பன சுந்தரி பாடலுக்கு தனது ரீல் தங்கையுடன் சேர்ந்து குத்தாட்டம்   போட்டு உள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Delna (@delnadavis_)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here