‘அன்பே வா’ சீரியலில் இணையும் விஜய் டிவி பிரபலங்கள் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

0

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலில் தற்போது புது முகங்களாக இரண்டு முக்கிய பிரபலங்கள் அறிமுகமாக உள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு அந்த பிரபலங்களின் ரீஎன்ட்ரியால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

அன்பே வா

தற்போது ரசிகர்கள் மத்தியில் சீரியல்கள் அனைத்தும் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் கதாநாயகன் மற்றும் கதாநாயகி இருவரையும் பிடித்து விட்டால் போதும் ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாட ஆரம்பித்து விடுவர். அந்த வகையில் தான் பல இளம் ஜோடிகளை பல தொலைக்காட்சிகள் களமிறக்கி வருகிறது. விஜய் டிவி, சன் டிவி, கலர்ஸ் என பலரும் காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்தே கதைகளை உருவாக்கி வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அப்படி சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ஒன்று தான் அன்பே வா. கலர்ஸ் தொலைக்காட்சியில் பேரழகி சீரியலில் ப்ரித்வி கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் விராட். டெல்னா டேவிஸ் என்பவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இவர்களை ரசிகர்களுக்கு பிடித்து போகவே தற்போது இந்த சீரியல் சக்கை போடு போட்டு வருகிறது.

‘ரேஷன் கடைகளில் 5 கிலோ தானியங்கள் இலவசமாக வழங்கப்படும்’ – பிரதமர் மோடி உத்தரவு!!

இந்நிலையில் இந்த சீரியலில் மேலும் சுவாரசியத்தை ஏற்படுத்தும் விதமாக பிரபல டான்ஸ் ஜோடியான ராகவ் ப்ரீத்தா இணைய உள்ளதாக இணையத்தில் செய்திகள் உலாவி வருகிறது. இதனை கேட்ட பலரும் ஆர்வத்தில் உள்ளனர். ஏனெனில் தொடர்ந்து ராகவ் ப்ரீத்தா ஜோடி சில ஆண்டுகளுக்கு முன்பாகவே விஜய் டிவியில் டான்ஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள். இந்நிலையில் இவர்கள் இந்த சீரியலில் அறிமுகமாகியுள்ளது பலரும் குஷியாக்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here