இணையத்தை கலக்கும் ஆதியின் அன்பறிவு ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் !!!

0

தனது ஹிப்ஹாப் பாடல்கள் மூலம் அறிமுகமாகி மக்களின் மனதில் இடம் பிடித்த ஹிப்ஹாப் ஆதி தற்போது அன்பறிவு எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்த திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிறது.

அன்பறிவு:

ஆல்பம் பாடல்கள் மூலம் இண்டிபெண்டெண்ட் இசையமைப்பாளராக உருவாகியவர் தான் ஹிப்ஹாப் தமிழா ஆதி. தனது ஆரம்ப காலத்தில் இண்டிபெண்டெண்ட் இசையமைப்பாளராக முயற்சித்து பல ஆல்பம் பாடல்களை வெளியிட்டார். இதன் மூலம் சமூக வலைத்தளங்களில் பிரபலம் ஆனார்.

அதனை தொடர்ந்து சினிமாவில் இசை அமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் விஷால் நடித்து சுந்தர்.சி இயக்கத்தில் ஆம்பள திரைப்படத்திற்கு இசை அமைப்பாளராக தனது பயணத்தை துவங்கினர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இசையமைப்பாளர் அவதாரத்தை தொடர்ந்து நடிகராக விஸ்வரூபம் எடுத்தார். மீசையை முறுக்கு, நட்பே துணை, நன் சிரித்தால் திரைப்படங்களை தொடர்ந்து தற்போது அன்பறிவு எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதில் நடிகர் நெப்போலியன் மற்றும் விஜய் டிவி பிரபலம் தீனா ஆகியோர் நடிக்கின்றனர். இவர்கள் அனைவரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here