Tuesday, April 23, 2024

மத்தியப்பிரதேச ஆளுநரானார் திருமதி.ஆனந்திபன் படேல் – உத்தரப்பிரதேச ஆளுநர் பதவியுடன் கூடுதல் பொறுப்பு!!

Must Read

உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி.ஆனந்திபன் படேலுக்கு மத்தியப்பிரதேச ஆளுநர் பதவியை கூடுதல் பொறுப்பாக அளித்துள்ளார் குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த்.

மத்தியப்பிரதேச ஆளுநர் மரணம்

மத்தியப்பிரதேச ஆளுநர் பதவியை வகித்தவர் திரு லால் ஜி டண்டன். அவர் சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

கூடுதல் பொறுப்பு

அவர் மறைவையடுத்து குடியரசுத் தலைவர், உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி.ஆனந்திபன் படேலுக்கு மத்தியப்பிரதேச ஆளுநர் பதவியை கூடுதல் பொறுப்பாக அளித்துள்ளார்.

இதையும் படியுங்க ⇒⇒சட்டசபைக் கூட்டத்தொடரில் பங்கேற்ற எம்.எல்.ஏ வுக்கு கொரோனா!!!

அவர் மத்தியப்பிரதேச ஆளுநரின் செயல்பாடுகளை தற்போதைய தனது கடமைகளுடன் சேர்த்து கூடுதலாக கவனிப்பார். மத்தியப்பிரதேச ஆளுநர் அலுவலகத்திற்கு வழக்கமான ஏற்பாடுகள் செய்யப்படும் வரை இந்த ஏற்பாடு தொடரும் என்று குடியரசுத் தலைவர் அலுவலக செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

திருமதி.ஆனந்திபன் படேல்

இவர் முன்னாள் மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் ஆளுநராக பதவியில் இருந்தவர் ஆவார். இவர் குஜராத் மாநில முன்னாள் முதல்வராகவும் பதவி வகித்துள்ளார். இவர் 1987 முதல் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக இருந்து வருகிறார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -