
பெரும்பாலான வீடுகளில் மக்கள் தங்களின் செல்ல பிராணியாகவும், வீட்டு பாதுகாப்புக்காகவும் நாய்களை வளர்த்து வருகிறார்கள். இதில் பெரும்பாலானோர் வெளிநாட்டு வகை நாய்களை உரிய அனுமதி பெற்று, பல்வேறு நிபந்தனைகளுடன் வீட்டில் வளர்த்து வருகின்றனர். ஆனால் ஒரு சிலர், அனுமதி இல்லாமல் நாய்களை வளர்த்து வருவதால் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரள மாநிலத்தில் இது பெரும் பிரச்சினையாக உருவெடுத்து உள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதனால் நாள் ஒன்றுக்கு 20 பேராவது தெருநாய்களால் கடிபட்டு பல்வேறு தொற்றுகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் சென்னை குரோம்பேட்டை பகுதியில் தெரு நாய்கள் விரட்டி பெண் ஒருவர் விபத்துக்குள்ளானது பெரும் அதிர்வலையை உண்டாக்கியது. இதையடுத்து சென்னை மாநகராட்சி புதிய யுக்தியை கையாள உள்ளது. அதாவது 5 பேர் கொண்ட 16 குழுக்களை அமைத்து உள்ளது. இவர்கள் தெருக்களில் மூர்க்கமாக திரியும் நாய்களை பிடித்து காப்பகத்தில் சேர்த்து விடுவார்கள்.
வங்கி கணக்கில் பணம் செலுத்துவதால் அரசுக்கு ரூ. 2.2 லட்சம் கோடி மிச்சம்., மத்திய அரசு பெருமிதம்!!
பின்னர் அங்கு மூர்கத்தனத்தை குறைக்க ஊசி போட்டு பயிற்சிகளும் வழங்கப்படும். இவைகள் நன்கு தேறியவுடன் விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் கடந்த மாதம் மட்டும் சுமார் 297 தெரு நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர். அதேபோல் தெரு நாய் தொல்லை உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் 1913 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் செய்யவும் அறிவுறுத்தியுள்ளனர்.