ஏப்ரல் 29ம் தேதி, 31,320 கிமீ வேகத்தில் பூமியை தாக்க வரும் பிரம்மாண்ட எரிகல் – நாசா அதிகாரப்பூரவ எச்சரிக்கை..!

0
NASA
NASA

மிகப்பெரிய 4 கிமீ அகலமுடைய ஏரிகல் ஒன்று பூமியை நோக்கி பயணிப்பதாகவும் அது ஒருவேளை பூமியை மோதினால் மிகப்பெரிய அழிவுகள் ஏற்படும் என நாசா எனப்படும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்து உள்ளது.

எரிகல் & விண்கல்:

விண்கல் என்பது பூமி வளிமண்டலத்தில் இருந்து பூமியை நோக்கி வருமாயின் அது மேற்புறத்தில் இருந்து ஈர்ப்பு விசை காரணமாக அதிவேகத்தில் வரக்கூடும். சூரிய மண்டலத்தில் பில்லியன் கணக்கில் சிறு கற்களும், உலோகப் பாறைகளும் நீந்திக் கொண்டிருக்கின்றன. இவையே விண்கற்களாக வருகின்றன. இந்த விண்கற்கள் வளிமண்டலத்தின் உராய்வு வெப்பத்தினால் எரிந்து, ஒளிந்தபடியான பாதையை ஏற்படுத்துவதால் எரிகற்கள் என அழைக்கப்படுகின்றன.

இவற்றில் பல கற்கள் முழுவதும் எரிந்து வளிமண்டலத்தில் கரைந்து விடும். சில கற்கள் பூமியின் மீது விழுந்து மிகப்பெரிய பள்ளங்களையும் ஏற்படுத்தி உள்ளன. சூரிய குடும்பத்தில் மிதந்துக் கொண்டிருக்கும் கற்கள் சில நேரங்களில், வியாழனின் ஈர்ப்பு விசை காரணமாக உள் சூரிய மண்டலத்தை நோக்கி பயணிக்கிறது, அதில் சில பூமியை அச்சுறுத்தும் வகையிலும் உள்ளது.

ஏப்ரல் 29ம் தேதி:

அந்த வகையில் ஏப்ரல் 29ம் தேதி நான்கு கிலோமீட்டர் அகலம் கொண்ட பிரம்மாண்ட ஏரிகல் ஒன்று பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இது ஏப்ரல் 29ம் தேதி, புதன்கிழமை அதிகாலை 4:56 மணிக்கு பூமிக்கு மிக அருகில் இந்த எரிகல் பறந்து செல்லும் என நாசா கணித்துள்ளது. இந்த ஏரிகல் ஒருவேளை பூமியை தாக்கினால் மிகப்பெரிய அழிவுகள் ஏற்படும் என கூறப்படுகிறது.

ஆனால் இந்த ஏரிகல் பூமியை தாக்குவதற்கான வாய்ப்பு குறைவே என்றும் பூமியை எரிகல் நெருங்கும்போது அளவு குறைந்து சிறிய துகள்களாக மாறவே அதிக வாய்ப்பிருப்பதாகவும் நாசா கூறியுள்ளது. இந்த எரிகல்லுக்கு 52768 (1998 OR2) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த எரிகல் முதலில் 1998ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் மணிக்கு 31 ஆயிரத்து 320 கிலோமீட்டர் வேகத்தில் கடந்து செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here