டிடிவி தினகரனை முதல்வராக்க வேண்டும் – அமமுக பொதுக்கூட்டத்தில் தீர்மானம்!!

0

இன்று அமமுக கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் தினகரனை முதல்வராக்க வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமமுக

தமிழகத்தில் வரும் மே மாதத்துடன் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் முடிவுக்கு வர உள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அனைத்து கட்சிகளும் தேர்தலுக்காக தங்களது பிரச்சார வேலைகளை துவக்கி நடத்தி வருகின்றனர். மேலும் தேர்தல் அதிகாரிகளும் தேர்தல் குறித்த பணிகளை மிக சிறப்பாக செய்து வருகின்றனர். சிறைத்தண்டனைக்கு பின்பு தமிழக திரும்பியுள்ளார் சசிகலா.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் அரசியல் களமே சூடுபிடித்துள்ளது. மேலும் சசிகலா மற்றும் தினகரன் இருவரும் அதிமுகவை கைப்பற்ற திட்டம் தீட்டி வருகின்றனர். தற்போது இன்று அமமுக கட்சியின் பொதுக்குழு செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் 10 இடங்களில் காணொளி மூலம் நடைபெற்றது. இதில் அந்த கட்சியின் தலைவர் தினகரன் மற்றும் முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது அதிகரிப்பு – முதல்வர் அதிரடி!!

இந்த கூட்டத்தில் 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி முதலாவதாக அதிமுக கட்சியை மீட்டேடுக்க அயராது உழைக்க வேண்டும், மேலும் தினகரனை தமிழக முதல்வராக்க வேண்டும். இதனை தொடர்ந்து தேர்தல் பணிகள் மற்றும் கூட்டணி கட்சிகள் குறித்த முடிவுகளை எடுக்க தினகரனுக்கு உரிமை உண்டு. மேலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வழிவகை செய்தல் மற்றும் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரின் விடுதலை குறித்து மத்திய மற்றும் மாநில அரசிடம் முடிவு உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here