முழு ஊரடங்கிலும் இயங்கும் அம்மா உணவகம் செயல்படுமா??

0

தீவிரமாக பரவிவரும் கொரோனா தொற்றின் தாக்கத்தை குறைக்க பல கட்டுப்பாடுகளை தொடர்ந்து தற்போது முழு ஊரடங்கு அறிவிக்க்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கிலும் அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது

தமிழகத்தில் அம்மா உணவகம்:

புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட அம்மா உணவகமானது பலதரப்பட்ட மக்களுக்கும் பயன்படும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பல ஏழை எளிய மக்களின் உணவுக்கு வாழ்வாதாரமாக அம்மா உணவகம் இருந்து வருகின்றது. பரவி வரும் கொரோனா இரண்டாம் அலையினால் நாடு முழுவதும் கடுமையான பாதிப்பை அடைந்து வருகிறது.

கொரோனா தீவிரபாதிப்பில் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்தவும், நோயின் தாக்கத்தை குறைக்கவும் தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு இறுதியாக முழு ஊரடங்கு சட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அமல்படுத்தியுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கினால் அனைத்து கடைகளும் திறக்க தடை விதித்துள்ள நிலையில் அம்மா உணவகம் வழக்கம்போல இயங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். டாஸ்மாக் கடைகள் திறப்பு, பொதுப் போக்குவரத்து போன்றவற்றுக்கு தடைவிதிக்கப்படுகிறது. இருப்பினும், நண்பகல் 12 மணி வரை மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் கடைகள் திறக்க அனுமதிக்கப்படுகிறது. அதேபோல, தமிழகம் முழுவதுமுள்ள அம்மா உணவகங்களும் வழக்கம் போல செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here