
தென்னிந்திய திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் ராஷ்மிகா மந்தனா. இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்தும் வந்த இவர் தற்போது அனிமல் திரைப்படத்தில் நடித்து பாலிவுட் சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்துள்ளார்.
இந்த போட்டோவில் இருக்கும் நட்சத்திரம் யாருன்னு தெரியுமா? என்னது.., லியோ படத்துல நடிச்சுருக்காங்களா?
இப்படி இருக்கையில் AI தொழில்நுட்பம் பயன்படுத்தி மார்பிங் செய்யப்பட்ட ரஷ்மிகாவின் ஆபாச வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த திரையுலகினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சனும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த வீடியோவை எடிட்டிங் செய்து இணையத்தில் போட்டவரை கடுமையான நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக் கொண்டுள்ளார்.