இந்தியாவில் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’, ‘ஒரே கல்விக்கொள்கை’ போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்திய மத்திய அரசாங்கம் தேர்தலையும் ஒற்றை முறையில் நடத்த முடிவு செய்துள்ளது. அந்த வகையில், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற திட்டத்தின் கீழ் ஊராட்சி தேர்தல் முதல் நாடாளுமன்ற தேர்தல் வரை அனைத்தையும் ஒரே முறையில் நடத்துவதற்கான ஆய்வுப் பணிகளை மத்திய அரசு துவங்கி இருக்கிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதன்படி, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை செயல்படுத்தும் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் 8 பேர் கொண்ட ஆய்வுக்குழுவை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த குழுவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.