பாலிவுட் நடிகர் அமீர்கானுக்கு கொரோனா தொற்று உறுதி – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0

பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கானிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து தன்னுடன் இருந்தவர்கள் கவனமாக இருக்கும்படி அவர் வலியுறுத்தி உள்ளார்.

அமீர் கான்

பாலிவுட் திரைதுறையின் மிகவும் முக்கியமான நடிகராக இருப்பவர் தான், அமீர் கான். 56 வயதான இவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். கொரோனா பாதிப்புகளுக்கு பிறகு இவர் படப்பிடிப்புகளில் பங்கேற்று வந்தார். இவர் தற்போது “லால் சிங் சாத்தா” என்ற திரைப்படத்தின் படப்பிடிப்புகளில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை அடுத்து இவர் நேற்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றும் உள்ளார். இன்று இவருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த செய்தியினை அமீர் கானின் உதவியாளர்கள் உறுதி செய்துள்ளனர். கொரோனா தொற்று பாதிக்கப்பட்டதன் காரணமாக அமீர் கான் தன்னை தானே தனிமைபடுத்தி கொண்டார் என்றும் தகவல்கள் வெளியாகியாகியுள்ளது.

வெள்ளை நிற சேலையில் கொள்ளை அழகுடன் ராஷ்மிகா – ட்ரெண்டாகும் புகைப்படங்கள்!!

நடிகர் அமீர் கான் தன்னுடன் படப்பிடிப்பு தளங்களில் வேலை பார்த்தவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியும் உள்ளார். அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதே போல் அமீர் கான் நன்றாக இருப்பதாகவும் அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here